தமிழ்நாடு

tamil nadu

அகில பாரதத் துறவியர் சங்கம் சார்பில் வைகை நதியைப் பாதுகாக்க நடைபயணம்

By

Published : Mar 24, 2019, 2:21 PM IST

தேனி: வைகை நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி, வருசநாடு அருகே வாலிப்பாறையில் உள்ள வைகை ஆற்றிலிருந்து அகில பாரதத் துறவியர் சங்கத்தின் சார்பில் நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது.

theni

நதிகள் தமிழர்களின் பண்பாடு, நாகரிகத்தின் அடையாளங்களாகும். தமிழ்நாட்டில் பாய்ந்தோடும் நான்காவது பெரிய நதி வைகை நதியாகும். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் வைகை உள்ளிட்ட முக்கிய நதிகள் ஆக்கிரமிப்பின் பிடியிலும், மாசடைந்தும் வருகிறது.

இந்நிலையில், வைகை நதியின் தூய்மையையும், புனிதத்தையும் மீட்டெடுக்க தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி அகில பாரதத் துறவியர் சங்கத்தினர், மதுரை மக்களுடன் இணைந்து மதுரையில் வைகைப்பெருவிழா நடத்த உள்ளது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவினையொட்டி, வைகையின் பிறப்பிடமான மூலவைகையாற்றில் இருந்து கடைக்கோடி பகுதி வரை உள்ள வைகைக் கரையோரம் வசிக்கின்ற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடைபயணம் இன்றுதேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறையில் உள்ள வைகை ஆற்றிலிருந்து தொடங்கப்பட்டது. இப்பேரணியானது வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்கரை கிராமத்தில் நிறைவடைகிறது.


இந்த நடைபயணத்தில்வைகை ஆற்றின் வழித்தடங்களில் தீப ஆராதனை செய்து வழிபட்டும், வைகையின் புனிதம், தூய்மை, பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அப்பகுதி மக்களிடம் விநியோகித்துவருகின்றனர். இந்தப் பேரணியில் அகில பாரதத் துறவியர்கள், வைகை பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரைக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details