தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் - சுதா தம்பதி. இவர்களுக்கு தரணிகா(6), பிரணிகா(3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சதீஷ் தனது குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் போடிக்கு சென்றுள்ளார்.
அப்போது தர்மத்துப்பட்டி அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவர்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
விபத்தில் கணவர் பலி; கர்ப்பிணி மனைவியும் 2 குழந்தைகளும் படுகாயம்! - bike accident theni
தேனி: போடி அருகே இருசக்கர வாகனம் கார்மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கர்ப்பிணியான மனைவியும், அவரது இரண்டு பெண் குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.
accident
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே சதீஷ் உயிரிழந்தார். ஆறு மாத கர்ப்பிணியான சுதாவுக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் போடியில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதிய கார்; பதறவைக்கும் சிசிடிவி காட்சி!