தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி கருவூலத் துறை அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி - Theni Latest News

தேனி: ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கருவூலத் துறை அலுவலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Theni treasury official confirmed corona infection
Theni treasury official confirmed corona infection

By

Published : Jul 25, 2020, 12:35 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய், ஊரக வளர்ச்சி, தேர்தல் பிரிவு, கரோனா தடுப்புக் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. அலுவலகத்தின் தரைத் தளத்தில் மாவட்டக் கரூவூலம் செயல்பட்டுவருகிறது.

இந்த அலுவலகத்தில் பணிபுரியும் தேனி பாரஸ்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட தொந்தரவு காரணமாக கடந்த இரண்டு நாள்களாக அவர் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் பணிபுரிந்த மாவட்டக் கருவூல அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அலுவலகம் முழுவதும் தேனி நகராட்சி சார்பாக கிருமிநாசினி தெளிக்கபட்டு, சுத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இந்த அலுவலகம் தடைசெய்யபட்ட பகுதியாக அறிவிக்கபட்டு, மூடப்பட உள்ளது. அதன் பின்னர் வழக்கம் போல அலுவலகம் செயல்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வரிசையில் தற்போது மாவட்டக் கருவூலத் துறை அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details