தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் பெய்த கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி - Theni Summer Heavy Rain

தேனி: பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை மழை
கோடை மழை

By

Published : Apr 26, 2020, 11:21 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கோடை வெப்பத்தினால் மக்கள் தவித்துவந்தனர். பகல் முழுவதும் வாட்டி வதைக்கிற இந்த வெப்பத்தால் சாலைகளில் கானல் நீராகவே காட்சியளித்தன.

இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட அனைவரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் வழக்கம்போல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

கோடை மழை

பின்னர் இரவில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் பிடியில் சிக்கியிருந்த மக்களுக்கு இது சற்று ஆறுதலாக அமைந்தது. இந்தக் கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு 98 விழுக்காடு ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details