தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ், ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு! - ஓபிஎஸ் அவரது மகன் ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி‌.ரவீந்திரநாத் மீது திமுக பிரமுகர் மனுத்தாக்கல். செய்த நிலையில், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு எம்பி‌, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ் அவரது மகன் ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஓபிஎஸ் அவரது மகன் ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By

Published : Jan 8, 2022, 12:10 PM IST

தேனிமாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளரான இவர், தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனித்தனியாக இரண்டு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ்-ன் மகன், ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில், உண்மையான சொத்து விபரங்களை மறைத்து பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.‌ எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவித்திருந்தார்.

தேனி சிறப்பு நீதிமன்றம்

இந்த மனுக்கள் மீதான விசாரணை மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்றும் (ஜன.6) இன்றும் (ஜன7 இரு நாள்கள் நடைபெற்றது.‌

ஓபிஎஸ் அவரது மகன் ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த விசாரணையில், மனுதாரரின் புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை அறிக்கையை வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் அவரது மகன் ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேலும், புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரையும் வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடாது எனவும், மனுதாரருக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நடிகை குஷ்பூ, பொன்னார் உள்பட 153 பேர் வழக்குப்பதிவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details