கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா குறித்த விழிப்புணர்வைக் காணொலி, குறும்படம் மூலமாக மக்கள் மத்தியில் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்திவருகின்றன.
எம்ஜிஆரின் பாடலில் கரோனா விழிப்புணர்வு - காணொலி வைரல் - theni school teacher viral video
தேனி: கரோனா வைரஸ் குறித்து எம்ஜிஆரின் பாடல்களைப் பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் அரசுப்பள்ளி ஆசிரியரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
dsd
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்த மணி, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் கரோனா குறித்தும், ஊரடங்கு குறித்தும் எம்ஜிஆரின் பாடல் வரிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். தற்போது,இவரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:காத்திருந்த விவசாயி... பொறுமையிழந்து விளைபொருட்களை சாலையில் கொட்டிய அவலம்!