தேனி: ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்கள் பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பள்ளி கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்தது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் அடுத்தடுத்து 3 நாட்களாக மேற்கொண்ட விசாரணையில் உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.