தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுதல் கடிதம் அனுப்பிய மாணவனுக்குப் பதிலளித்த இஸ்ரோ சிவன்! - மாணவன் எழுதிய கடிதம்

தேனி: சந்திரயான் - 2 தோல்விக்கு ஆறுதல் கடிதம் எழுதிய மாணவனுக்கு இஸ்ரோ சிவன் பதிலளித்து கடிதம் எழுதியுள்ளார்.

Theni School student wrote a consolation letter to ISRO Shivan and he writes back

By

Published : Oct 22, 2019, 10:13 PM IST


2008ஆம் ஆண்டு சந்திரயான் - 1 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி இந்தியா கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இந்தியா விண்வெளி ஆய்வில் தனது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்த நேரம் அது. ஆம் பத்து ஆண்டாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் பிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் விண்ணை நோக்கிப் பயணித்தது. இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தனது ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டது.

இந்த நிகழ்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கு வேளையில், நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் என்ற லேண்டர் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு சுமார் 2 கி.மீ. தொலைவிலிருந்தபோது விஞ்ஞானிகள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிகழ்வினால் ஒட்டுமொத்த நாடும் சோகமடைந்தது.

மாணவன் தாழைஅரசன்

சந்திரயான்-2 தோல்வியால் வருத்தமடைந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர்விட்டார். அதைப் பார்த்த தேனி பாரஸ்ட் ரோடு 4ஆவது தெருவைச் சேர்ந்த ராஜவேல் - பாமாதேவி தம்பதியினரின் மகன் தாழைஅரசன் (14). தேனி என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் இவர், கடந்த செப்டம்பர் 28இல் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

" ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில், சிறு வயதிலிருந்தே நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை!
ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுவது நிராகரிக்கப்படும்!
அதை ஏற்றுக் கொள்வேன்! எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வது போல் முடிவு சிறப்பாக அமையும்! எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுபோல் விக்ரம் லேண்டர் பிரச்சினைக்காகக் கவலைப் படாதீர்கள்!

நீங்கள் சிவன்! உங்கள் தலை மீது சந்திரன் உள்ளான்!
அதனால் அடுத்தத் திட்டத்தில் வெற்றி வசமாகும்!
"
எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாணவன் எழுதிய கடிதம்

இதைப் படித்த சிவன்,
"உன் அன்பு கருத்திற்கு மிக்க நன்றி!
சந்திரயான்-2 திட்டத்தைத் தொடர்ந்து கவனித்து அதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறாய்!
சந்திரயான்-2 பற்றி நீ சேகரித்த செய்திகளை எனக்கு அனுப்பியதற்கு நன்றி!
சந்திரயான்-2 லேண்டர் வெற்றிகரமாகத் தரை இறங்காமல், இருந்தாலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது!
சந்திரயான்-2 சுற்றுகலன் (ஆர்பிட்டர்) அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை ஒரு வருட காலத்தை, தாண்டி ஏழு வருட காலத்திற்கு அனுப்பும்! இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் வெற்றிபெற உன் வாழ்த்துகளைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்!
" என மாணவனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்ரோ சிவன் எழுதிய கடிதம்

மாணவனின் இச்செயலுக்குப் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details