தேனி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவை இடம் பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
இந்நிலையில் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் நேற்று மாலை முதல் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது.