தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூண்டில் சிக்கிய சிறுத்தை: பொதுமக்கள் நிம்மதி - Theni leopard

தேனி: வண்டிப்பெரியார் அருகே ஒரு மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி
கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி

By

Published : Feb 20, 2020, 9:31 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வனப்பகுதியை ஒட்டிய நெல்லிமலையில் ஒரு மாதமாக சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து இருந்தனர். பகல், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வந்தது. ஆகவே வனத்துறையினர் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைத்திருந்தனர். அந்த கூண்டில் தற்போது சிறுத்தைப்புலி சிக்கியது. இதனையடுத்து பிடிப்பட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினர் குமுளி அடுத்துள்ள வல்லக்கடவு வனப்பகுதியில் திறந்து விட்டனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி

பிடிப்பட்ட சிறுத்தைப்புலிக்கு மூன்று வயது என வனத்துறையினர் தெரிவித்தனர். ஒரு மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலி பிடிப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கூண்டில் சிக்காமல் டிமிக்கி கொடுக்கம் சிறுத்தை - அச்சத்தில் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details