தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் 20 பேருக்கு கரோனா; அதிர்ச்சியில் மக்கள்!

தேனி: டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

theni people affect
theni people affect

By

Published : Apr 2, 2020, 10:45 PM IST

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விவரத்தைச் சேகரித்த தேனி மாவட்ட சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் நேற்று முன்தினம் காலை முதலே, அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 24 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிப்பட்டு, கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று காலை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் ஆகிய இருவரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இச்சூழலில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டார். அதில், தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த 20 பேரில், 14 பேர் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர்கள் எனவும், மூன்று பேர் பெரியகுளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தலா ஒருவர் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று அனுமதிக்கப்பட்ட 24 பேரில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், கரோனா தொற்று உறுதியான 20 பேர், கடந்த நாள்களில் எங்கெல்லாம் சென்றிருக்கிறார்கள், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details