சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மூன்று ஆண்டுகள் தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவந்த பல்லவி பல்தேவை பணியிட மாற்றம்செய்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டார்.
அவருக்குப் பதிலாக நிதித் துறை இணைச் செயலாளராகப் பணியாற்றிவந்த கிருஷ்ணன் உன்னி என்பவரை மாவட்ட ஆட்சியராக நியமனம்செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தலைவாசல் கால்நடை பூங்கா திறப்பு எப்போது? அமைச்சர் தகவல்
இந்நிலையில் தேனி மாவட்டத்தின் 16ஆவது ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி இன்று (பிப். 22) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு அலைபேசிகளை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: கிருஷ்ணன் உன்னி குறித்து மேலும் அறிந்துகொள்ள கிளிக் செய்யவும்.