தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்! - theni medical students

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

theni

By

Published : Sep 20, 2019, 6:42 PM IST

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் 385 மதிப்பெண் பெற்று மாநில ஒதுக்கீட்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இதனையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு சென்னை மருத்துவ மாணவர் அசோக் கிருஷ்ணன் என்பவர் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மின்னஞ்சல் வாயிலாக மாணவர் உதித் சூர்யா ஆள்மாறட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்று புகார் அனுப்பியுள்ளார்.

மேலும் மகராஷ்டிர மாநிலத்தில் அவர் நீட் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்டையும் உடன் அனுப்பி வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை இல்லாததால், மீண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி புகார் அனுப்பினார். இதனையடுத்து கல்லூரி துணை முதல்வர் இளங்கோ, பேராசியர்கள் ஜெயந்தி, ரெத்திகா, விஜயலட்சுமி கொண்ட குழு அமைத்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டார். விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் மனஉளைச்சல் காரணமாக படிப்பை தொடர இயலாது என கடிதம் அனுப்பிவிட்டு மாணவர் உதித் சூர்யா தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்படி தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள மாணவரை பிடிப்பதற்கு ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பளர் சீனிவாசன், ஆய்வாளர் உஷா தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு அந்த குழு சென்னையில் முகாமிட்டுள்ளது.

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்!

இதனிடையே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்துள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 2019-20ஆம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருகிறது. கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்களான 5 பேர் கொண்ட குழுவினர் இந்த சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரியில் 57 மாணவர்கள், 43 மாணவிகள் என மொத்தம் 100 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, நீட் தேர்வு மதிப்பெண் சான்று, சாதிச் சான்றிதழ் மற்றும் கல்லூரி அனுமதி அட்டை உள்ளிட்டவைகளை இக்குழுவினர் சரிபார்த்து வருகின்றனர். இதன் ஆய்வறிக்கையை மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக படிக்க: "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?" - சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை கோரிய கல்லூரி நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details