தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்புமனு தாக்கல் செய்யும் குமரகுருபரன் - வேட்புமனு தாக்கல் செய்யும் குமரகுருபரன்

தேனி:தமிழகம் முழுவதும் இன்று முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் தேனியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் முதல் ஆளாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு

By

Published : Mar 19, 2019, 8:27 PM IST

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேனி
மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நிலையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதல் ஆளாக குமரகுருபரன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியை சேர்ந்த 45 வயதான குமரகுருபரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.


தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கூறுகையில், "ஜனநாயக ரீதியாக நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன். இந்த தேர்தலில் மக்கள் தனக்கு வாய்ப்பளித்தால், திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போன்று விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் கிடைத்திட முயற்சிகள் எடுப்பேன்", என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details