கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, சிலர் அத்தியாவசிய தேவைகளின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றித் திரிகின்றனர். இவர்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நூதன தண்டனையை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் காந்தி சிலை அருகே இன்று காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை உத்தரவை மீறி அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 50க்கும் மேற்பட்டோரை மறித்து வாகன சாவியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.