தேனி:கடந்த 2020ஆம் ஆண்டு தேனி அருகே உள்ள தப்புக்குண்டுவில் 89 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு சட்டக் கல்லூரி கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவை அப்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தனர்.
பணிகள் முடிவு பெற்றதை அடுத்து கல்லூரி வளாக கட்டடம், மாணவர் விடுதி வளாக கட்டடம், கருத்தரங்கு வளாக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டக்கல்லூரி திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறth தொடங்கியது. இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு ஒரு சில ஆண்டுகளே ஆன அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தில் முன்பக்கம் விரிசல்கள் ஏற்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி முதல்வர் விளக்கம்:இந்த சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும், கல்லூரியில் இது போன்று அடிக்கடி நிகழ்வதாகவும், மாணவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கல்லூரியின் முதல்வர் கிருஷ்ண லீலாவிடம் விளக்கம் கேட்டபோது, “புது கட்டடங்களில் இது போன்று ஏற்படுவது இயல்புதான்.