தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் - 183 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு!

தேனி:183 கிராம ஊராட்சிகளில் 183 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது.

Theni Local body Election
Theni Local body Election

By

Published : Dec 19, 2019, 11:43 AM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரண்டு கட்டமாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவடைந்தது.

தேனி மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 65பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 552பேர், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 653பேர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,110பேர் என மொத்தம் 4,380பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சிகளில் 183வார்டுகளில் போட்டியிடுவதற்கு தலா ஒரு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 68வார்டுகளும், கடமலை – மயிலை ஒன்றியத்தில் 25வார்டுகளும், தேனி ஒன்றியத்தில் 29 வார்டுகளும், பெரியகுளம் ஒன்றியத்தில் 26வார்டுகளும், போடி ஒன்றியத்தில் 11வார்டுகளும், சின்னமனூர் ஒன்றியத்தில் 12வார்டுகளும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 10வார்டுகளும், கம்பம் ஒன்றியத்தில் 2வார்டுகளும் ஆக மொத்தம் 183வார்டுளுக்கு தலா ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களாக அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: நகராட்சித் தலைவர் பதவி இட ஒதுக்கீடு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details