கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் புதிதாக மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக தேனி அரசு சட்டக்கல்லூரி கடந்தாண்டு முதல் செயல்படத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்திற்கு வீரபாண்டி - தப்புக்குண்டு சாலையில் 14ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் சுமார் 89 கோடியே ஒரு லட்டம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு சட்டக்கல்லூரி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர். முன்னதாக வாஸ்து பூஜை , கோமாதா பூஜைகள் நடைபெற்றது.