கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் இன்று (ஜன.16) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள 7,354 முன்களப்பணியாளர்களில் நாள்தோறும் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளன.
இவர்களுக்காக 8,200 கரோனா தடுப்பு மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் தடுப்பூசி மருந்துகள் அவர்களுக்கு செலுத்தப்படுகின்றன.
இதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன் முதலாவதாக தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருதய நோய் நிபுணர் அறவாழி உள்ளிட்ட மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இன்றுமுதல் கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்