தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி - கண்துடைப்பு என விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! - theni farmers stopped desilting work

தேனி: பெரியகுளம் அருகே பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வரும் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியானது வெறும் கண்துடைப்புக்காக நடைபெறுவதாகக்கூறி, விவசாயிகள் பணியை தடுத்து நிறுத்தினர்.

ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தடுத்து நிறுத்தம்
ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தடுத்து நிறுத்தம்

By

Published : Jul 12, 2020, 7:14 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது சோத்துப்பாறை அணை. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது ராஜ வாய்க்கால் மூலம் பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பாபட்டிகுளம் ஆகியவை வழியாக கண்மாய்களில் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் மா, தென்னை உள்ளிட்டவைகள் பாசன வசதி அடைகின்றன. மேலும் இந்த அணை அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்கிறது.


இந்நிலையில் 60 அடி அகலம் கொண்ட ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி 20 அடியாக சுருங்கியுள்ளது. தற்போது ஆக்கிரமிப்பை அகற்றாமல் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் பெரியகுளம் பகுதி விவசாயிகள், கண்துடைப்பாக பணிகள் நடைபெறுவதாகக் கூறி தூர்வாரும் பணியினை தடுத்து நிறுத்தினர்.


இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வரவேற்புக்குரியது. அதே வேளையில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், மழைக் காலங்களில் கிடைக்கிற நீர் முழுவதும் தேங்காமல் வீணாகும். இதனால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.


ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தூர்வாரும் பணியினை பொதுப் பணித்துறையினர் வெறும் கண்துடைப்பாக செய்து வருகின்றனர். கண்மாய்களை தூர்வாராமல் ராஜவாய்க்காலை தூர்வாரி எந்தப் பயனும் இல்லை. எனவே, அரசு நிதியினை வீணடிக்காமல் முறையாக செயல்பட வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து பணி தடுத்து நிறுத்தப்படும்" என எச்சரித்தனர்.

இதையும் படிங்க: வாய்க்கால் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details