தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயக் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

தேனி: தனியார் வங்கியில் வாங்கிய 12 லட்சம் ரூபாய் விவசாயக் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

theni Farmer commits suicide  தேனி விவசாயி தற்கொலை  விவசாயக்கடனால் விவசாயி தற்கொலை  தேனி மாவட்டச் செய்திகள்
தேனியில் விவசாயி தற்கொலை

By

Published : Feb 28, 2020, 6:49 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (52). விவசாயியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 12 லட்சம் ரூபாயை விவசாயக் கடனாகப் பெற்றிருந்தார். போதிய மழை இல்லாததால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே, வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இவரால் முடியவில்லை.

இதற்கிடையே, வாங்கிய கடனைச் செலுத்தும்படி வங்கி சார்பில் இவருக்குத் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு தர்மலிங்கத்தின் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனியில் விவசாயி தற்கொலை

இதில், மனமுடைந்த விவசாயி தர்மலிங்கம், பூச்சிமருந்தைக் குடித்து மயங்கிவிழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கடமலைக்குண்டு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விவசாயக் கடனைச் செலுத்த முடியாமல் விவசாயி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறப்பாறை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'பணமும தரல' 'நடவடிக்கையும் யாருமே எடுக்கல' ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details