தேனி மாவட்டம் போடியில் நேற்று முன்தினம் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற கேரளாவைச் சேர்ந்த டாய் ஜோஸ்(21) என்பவரை க்யூ பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, போடி நகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. தற்போது டாய் ஜோஸ் அளித்த வாக்குமூலத்தின்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவரை க்யூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.