தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் முத்துப்பாண்டி (24). தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் போக்சோவில் கைது - theni driver pocso arrest
தேனி: ஆண்டிபட்டி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
arrest
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் முத்துப்பாண்டி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : மருத்துவர் போக்சோவில் கைது!