தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள ஜே.கே.பட்டி காந்திநகர் காலனியைச் சேர்ந்த தம்பதி பால்பாண்டி - லட்சுமி. இவர்களுக்கு அனுசுயா(16), ஐஸ்வர்யா(14), அக்ஷ்யா(8) ஆகிய மூன்று மகள்கள் இருந்துள்ளனர். சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வந்த பால்பாண்டி, நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம் இதையடுத்து, தையல் வேலை செய்து வந்த லட்சுமி, அக்டோபர் 3ஆம் தேதி விஷம் குடித்து மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இதில் அனுசுயா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமி, அவரது மகள் அக்ஷ்யா, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த லட்சுமி, அக்டோபர் 4ஆம் தேதி உயிரிழந்தார். இதில், மகள் அக்ஷ்யா மட்டும் உயிர் பிழைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமி பின்னர், உயிர் பிழைத்த சிறுமி அக்ஷ்யாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லட்சுமியின் பெரியப்பா மகன் பாண்டியனின் மகன் முத்துச்சாமியை(28) அனுசுயா காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பாண்டியன்(47), அவரது மனைவி, தனலட்சுமி(44), உறவினர்கள் விஜயகுமார் (39), செல்லத்தாய்(32), அம்பிகா ஆகியோர் லட்சுமியை பார்த்து உனது மகளுக்கு வசதியான மாப்பிள்ளை தேவைப்படுகிறதா எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த லட்சுமி, அன்றிரவு தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பாண்டியன், தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்பிகாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.