தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் தமிழக அரசை கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்! - ஆர்ப்பாட்டம்

ஐந்தாயிரம் மக்களுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் என்று பணி அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது 30 ஆயிரம் மக்களுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் இருப்பதால் பணிச் சுமை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கூறி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனியில் தமிழக அரசை கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!
தேனியில் தமிழக அரசை கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 10, 2023, 10:55 PM IST

தேனியில் தமிழக அரசை கண்டித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டத்தில் 8 வட்டங்களில் பணிபுரியும் 162 செவிலியர்கள் இணைந்து கருப்பு பட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் வசந்தா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தா, “ காலியாக உள்ள 2300 கிராம் சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மாநில அரசு சுகாதார செவிலியர்கள் மீது வேலைப்பளுவை சுமத்துவதை கைவிட வேண்டும். முற்றிலும் பழுதடைந்த, தங்குவதற்கு தகுதி இல்லாத துணை மைய கட்டிடத்திற்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். இதுவரை பிடித்தம் செய்த தொகையை திரும்பத் தர வேண்டும்.

இதையும் படிங்க:திருச்சியில் எலியை வாயால் கடித்து நூதன முறையில் போராடும் விவசாயிகள்!

10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேட் 1 ஆகவும், அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்.அலுவலக வேலை நேரம் தவிர்த்து அரசாணைக்கு எதிராக இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தற்போதுள்ள துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

ஐந்தாயிரம் மக்களுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது முப்பதாயிரம் மேற்பட்ட மக்களுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் இருப்பதால் வேலை பளு ஏற்பட்டுள்ளதால் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பு வேண்டும்.
துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதமடைந்த காரணத்தால் சட்டப்பேரவையில் அறிவித்தவாறு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்களை கட்டித் தர வேண்டும்” என கூறினார்

ஐந்தாயிரம் மக்களுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் என்று பணி அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது 30 ஆயிரம் மக்களுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் இருப்பதால் பணி சுமை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதன் அடிப்படையில் 14 அம்ச கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:திமுகவினரிடம் கேளுங்கள் கச்சத்தீவை தாரை வார்த்தது யாரென்று... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details