தேனி:ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்.30) தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து பல அமைப்பினர் வாகனங்களில் பேரணியாக செல்வது வழக்கம். இதனால், தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லும் வழியில் உள்ள 36 மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் வி.முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - தேனி மாவட்டத்தில்
தேவர் ஜெயந்தியையொட்டி, தேனி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Etv Bharat
தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்வதற்காக தேனியில் இருந்து பேரணியாக செல்லும் வாகனங்களால் பொதுமக்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மதுபானம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
இதையும் படிங்க: தேவர் குருபூஜை - பசும்பொன் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்