தேனி: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் ...தேனி மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டம் - AIADMK GC
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
ஈபிஎஸ்சை கொண்டாடிய ஓபிஎஸ் மாவட்ட அதிமுக தொண்டர்கள்!
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் AIAஒன்று சேர்ந்து, கம்பம் நகரின் முக்கிய சாலை சந்திப்பில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
இதையும் படிங்க:ஓ.பி.எஸ்.ஐ சாடிய நத்தம் விஸ்வநாதன் - அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?