தேனி மாவட்டத்தில் கோடை துவங்குவதற்கு முன்னரே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால், வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு வேறு இடத்திற்கு இடம்பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியிலே முடிகின்றன.
பற்றி எரியும் காட்டுத்தீ; அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்! - fire accident
தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின.
இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியான அகமலை, அச்சமலை ஆகிய வனப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிவதால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசம் அடைகின்றன. மேலும், இந்த காட்டுத்தீயால் வன விலங்குகள் வெப்பம் தாங்காமல், விலை நிலங்களுக்குள் புகும் நிலை உருவாகிவருகிறது.
எனவே வனத்துறையினர் காட்டுத்தீயை மேலும் பரவாமல் தடுத்து வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.