தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தேனியில் இதுவரை 702 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 163 பேர் மருத்துவத்துக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், போடியைச் சேர்ந்த 53 வயது பெண்மணி, ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கம்பத்தை சேர்ந்த 72வயது முதியவர் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண்மணி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் 27ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இதனால் தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம், “விசாரணை தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகம்” - பழ. நெடுமாறன்