தேனி மாவட்டத்தில் கோவிட்-19 நோய்ப் பரவலால், மார்ச் முதல் மே மாதம் வரையில் நூற்றுக்கும் குறைவானோர் பாதிப்படைந்தனர். ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலத்தில் இருந்து வருகை புரிந்தவர்களால், ஒரே மாதத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவியது.
இதன் காரணமாக நேற்று(ஜூலை 5) வரை 1009 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண்மணி, ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர், ஆண்டிபட்டியைச் சேர்ந்த 52 வயது பெண், பெரியகுளத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கம்பத்தைச் சேர்ந்த 72, 60, 56 வயது முதியவர்கள் என 7 பேர் பலியாகியுள்ளனர்.