தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜீவித் குமாரின் மேற்படிப்புக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம் - ஆட்சியர் பல்லவி பல்தேவ் - ஆட்சியர் பல்லவி பல்தேவ்

தேனி: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் ஜீவித் குமாரின் மேற்படிப்பிற்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் அரசிடம் பரிந்துரைத்து செய்து தரப்படும் என ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

jeevit kumar
jeevit kumar

By

Published : Oct 17, 2020, 6:56 PM IST

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சில்வார்பட்டியில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 2018-19ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஜீவித் குமார், கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில்193 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் படித்து இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் அரசுப்பள்ளிகளின் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஜீவித் குமார் இந்திய அளவில் தரவரிசைப்பட்டியலில் ஆயிரத்து 123ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

சிறு கிராமத்தில் பிறந்து அரசுப்பள்ளியில் படித்து இந்திய அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஜீவித் குமாருக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (அக்.17) தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாணவர் ஜீவித்குமாரை பாராட்டி நினைவுப் பரிசாக புத்தகத்தை வழங்கினார்.

ஜீவித் குமாரை பாராட்டிய ஆட்சியர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், "ஜீவித்குமாரின் வெற்றி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இவரைப் போல அனைத்து மாணவர்களும் மென்மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு எனது வாழ்த்துகள். இவரது மேற்படிப்பு செலவிற்காக நிதியுதவி ஏதும் தேவைப்பட்டால் அரசுக்கு பரிந்துரைத்து செய்து தரப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:“23 ஆண்டுகளாக ஒலிக்கும் எம்.ஜி.ஆர்., பாடல்”- கடலை வியாபாரியின் கதை!

ABOUT THE AUTHOR

...view details