தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்றுவருகிறது. இதில், வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை சார்பில் புதிதாக மீன்குஞ்சுகள் அணையில் விடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 16 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு இதுவரை 12.60 லட்சம் மீன்குஞ்சுகள் நீர் தேக்கத்தில் விடப்பட்டுள்ளன. மீதமுள்ள 3.40 லட்சம் மீன்குஞ்சுகள் வைகை அணை மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள 70 தொட்டிகளில் வளர்க்கப்பட்டுவந்தது.
கட்லா, மிருகால், ரோகு வகையைச் சேர்ந்த மீன் குஞ்சுகள் 50 நாட்கள் வளர்க்கப்பட்டு வைகை அணை நீர் தேக்கத்தில் விடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். புதிதாக மீன்கள் விடப்பட்டுள்ளதால், மீனவர்கள் சிறிய துளையுடைய வலைகளை மீன்பிடிக்கு பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டப்பட்டுள்ளது.
தேனி ஆட்சியர் 3.40 லட்சம் மீன்குஞ்கள் வைகை அணையில் விடுவிப்பு! இதையும் படிங்க:மீன் குட்டையை உப்பு இறால் குட்டையாக மாற்ற எதிர்ப்பு!