தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று (பிப்.26) அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி இன்று (பிப்.27) ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.
தேனி மாவட்டத்தில் 198- ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 257ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 931 வாக்காளர்கள் உள்ளனர். 199-பெரியகுளம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 900ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்களும், 103 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 31 பேர் உள்ளனர்.
200-போடிநாயக்கனூரில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 50 ஆண்களும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 893 பெண்களும், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 77ஆயிரத்து 964 பேர் உள்ளனர். 201-கம்பம் தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 619 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 918 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 85 ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர். நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 5 லட்சத்து 51 ஆயிரத்து 826 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 72 ஆயிரத்து 479 பெண் வாக்காளர்களும், 195 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 11 லட்சத்து 24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர்.