மதுரை: தேனியைச் சேர்ந்த கார்த்திக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "உத்தமபாளையம் பகுதிக்குட்பட்ட தேரடி, பைபாஸ், கிராமச்சாவடி, அம்மாபட்டி விளக்கு ஆகிய நான்கு இடங்களில் 12 அடி உயரம் அளவு கொண்ட கொண்டு பாஜக கொடி ஏற்றுவதற்காக கம்பம் நடபட்டது.
இந்த இடங்களில் பல கட்சி கொடி கம்பங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், காவல் துறையினர் சிமெண்ட் திட்டை கடந்த 16.09.2021 இரவு 10.00 மணியளவில் இடித்து அப்புறப்படுத்தினர். பிற கட்சிகளின் கொடி கம்பம் இருக்கும் நிலையில், பாஜக கொடி கம்பத்தை மட்டும் வைக்கக்கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தேரடி, பைப்பா, கிராமச்சாவடி, அம்மாபட்டி விளக்கு ஆகிய பகுதிகள் பிற கட்சிகளில் கொடி கம்பத்தை வைக்க அனுமதித்தது போல, பாஜக கொடி கம்பத்தையும் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். இதுகுறித்து அலுவலர்களுக்கு முறையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி