தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மலைவாழ் இன சிறுவர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாயம்! - investigation

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை அடுத்த கதிர்வேல்புரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில், தற்போது அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், அவர்களின் பெற்றோர், போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்து உள்ளனர்.

theni-based-three-tribal-children-missing-in-madhya-pradesh-aundipatti-police-investigation
தேனி அருகே மலைவாழ் இன சிறுவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் மாயம்

By

Published : May 18, 2023, 2:50 PM IST

தேனி:ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ள வேலப்பர்கோவில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் குடும்பம், குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பது, சுள்ளிகளைப் பொறுக்குவது, வேட்டையாடுவது உள்ளிட்ட வழக்கமான தொழில்களிலேயே ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் பதின்ம வயது சிறுவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிமாநிலங்களுக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. இதைத் தங்களது பெற்றோர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். பிள்ளைகளின் ஆசையும், அவர்களுக்கு சரியானதாகப் படவே, அதுகுறித்த முன்னேற்பாடு நடவடிக்கைகளில் இறங்கினர்.

அவர்கள், சுற்றுப்புற வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்ததில், உசிலம்பட்டி பகுதியில், இதற்கான ஏஜென்ட்கள் இருப்பதை அறிந்து கொண்டனர். இதன்காரணமாக, இவர்களுக்கு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த காசி உள்ளிட்ட இரண்டு பேரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் உடனடியாக அதற்கான செயல்பாடுகளில் இறங்கினர்.

கதிர்வேல்புரம் வனப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களான சீனி என்பவரின் மகன் பட்டவராண்டி
(வயது 16), வேல்முருகன் என்பவரின் மகன் ஞானவேல் (வயது 15), ரவி என்பவரின் மகன் தமிழரசன் (வயது 14) ஆகிய மூன்று சிறுவர்களையும், மதுரை ஏஜென்ட் காசி உள்ளிட்ட இருவர், மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியில் உள்ள இட்லிக் கடையில், வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்துச்சென்று உள்ளனர்.

அங்கு, ஆறு மாதங்களாக சிறுவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், அவர்கள், அவரவர் பெற்றோர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசி வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற சிறுவர்கள் மூன்று பேரும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.

இதனால், சிறுவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வேலைக்கு அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் வேலையை விட்டுச் சென்று விட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது.

அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியாது என்று அலட்சியமாகப் பதில் கூறியதாக சிறுவர்களின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள பழங்குடியின பெற்றோர்கள், தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details