தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திடலை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கபடி, இறகுப்பந்து, பூப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை விசில் அடித்தும், பந்து எறிந்தும் தொடக்கிவைத்தார். அவர் விளையாட்டுகளை தொடங்கிவைத்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்களோடு சிறிது நேரம் பூப்பந்தும் விளையாடி மகிழ்ந்தார்.