தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா உறுதி - தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

தேனி : மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரியும் அலுவலகம் மூடப்பட்டது.

Theni Adsp confirmed corona infection
Theni Adsp confirmed corona infection

By

Published : Aug 13, 2020, 4:56 PM IST

தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு காய்ச்சல், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவு இன்று (ஆக. 13) வெளியானதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் செயல்படும் அவரது அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக, நகராட்சி சுகாதாரத் துறையினர், ஏ.டி.எஸ்.பி அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

கரோனாவால் தேனி மாவட்டத்தில் காவலர்கள், சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details