தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியகுளம் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது! - தேனி பெரியகுளத்தில் தொடர் கொள்ளை

தேனி: பெரியகுளம் பகுதியில் பல்வேறு கொள்ளை வழக்கில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

-4-youngster-detained-in-a-theft-case

By

Published : Sep 21, 2019, 10:34 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடுகபட்டி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தொடர் கொள்ளை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வடுகபட்டி கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (20) மதன்குமார் (21) கார்த்தி (23) வேல்முருகன் (19) ஆகியோரை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இந்த இளைஞர்கள் பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் பெரியகுளம் குற்றவியல் நீதி மன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அங்கு குற்றவாளிகளை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டதையடுத்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

வடுகபட்டி கிராமத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details