உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துவருகிறது.
அதன்படி, அம்மாநிலத்தில் மார்ச் 31ஆம் தேி வரை திரையரங்குகளை மூட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேக்கடி படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமுள்ள பெரியார் புலிகள் சரணாலய காப்பகத்திற்குள்பட்ட சுற்றுலா இடங்களையும் மூடிட வனத் துறை உத்தரவிட்டுள்ளது.