தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு - போலீஸ் விசாரணை - செல்போன் திருட்டு

ஆண்டிபட்டியில் செல்போன் கடையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக செல்போன்களை திருடிச்சென்றவர்களை காவல் துறையினர் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Jun 26, 2022, 10:53 PM IST

தேனி:பாப்பம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆண்டிபட்டி - தேனி சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு (ஜூன் 25) வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அவர் இன்று (ஜூன் 24) ஞாயிற்றுக்கிழமை தாமதமாக வந்து கடையைத் திறக்க வந்துள்ளார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடையைத் திறந்து பார்த்தபோது கடையில் இருந்த உயர் ரக செல்போன்கள் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

உடனடியாக அவர் இது குறித்து ஆண்டிபட்டி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் கையெழுத்துப்போட சென்ற இளைஞர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details