தேனி:கூடலூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன். இவரது மகன் கார்த்திக். இவர் கனடா நாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கார்த்திக், தனது நண்பர் ரித்திக் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் நகர் பகுதிக்குச் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, அப்பாச்சி பண்ணை அருகே எதிரே வந்த மினிலாரி சரக்கு வாகனம் மீது எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னாள் எஸ்பியின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கார்த்திக் உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, படுகாயம் அடைந்த ரித்திக்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!
பள்ளி மாணவர்களுக்கான உள்நீச்சல் போட்டி:தேனியில் மாநில அளவிலான பள்ளி மாணவ மானவியருக்கான உள்நீச்சல் போட்டிகள் இன்று (ஜூலை 01) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட உள் நீச்சல் விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான பள்ளி மாணவ மானவியருக்கான உள்நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20 மாவட்டங்களைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற பள்ளி, மாணவ-மானவிகள் கலந்து கொண்டனர்.
10 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தபட்டன. இந்த போட்டியானது தலை முழுவதும் நீரில் முழ்கியபடியும், கால்களில் துடுப்பினை அணிந்தவாறு நீச்சல் அடிக்க வேண்டும். இந்த போட்டியில் நீச்சல் பயிற்சி பெற்ற 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கான உள்நீச்சல் போட்டி காலை 10 மணிக்கு தொடங்கிய நீச்சல் போட்டி தொடர்ந்து பல மணி நேரமாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடி மாவட்ட செய்திகள்: பனிமய மாதா திருவிழாவிற்காக சிறப்பு ரயில்கள் ; மீன் விலை ‘கிடுகிடு’