தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போடியில் பேராசிரியர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் - 8சவரன் தங்க நகை கொள்ளை

தேனி: போடியில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் 8 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

The robbery professor's house

By

Published : Nov 20, 2019, 4:42 AM IST

தேனி மாவட்டம் போடி மேற்கு ராஜவீதியில் வசிப்பவர் செல்வராஐன். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கடந்த 10நாட்களுக்கு முன்பு மனைவியுடன் சென்றுள்ளார்.

பத்து நாட்களாக வீடு பூட்டிக் கிடப்பதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று செல்வராஜின் மைத்துனர் கண்ணன் என்பவர் நேற்று மாலை செல்வராஜின் வீட்டை பார்ப்பதற்காக வந்த போது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குதறித்து காவல் துறையினருக்கும், சென்னையில் உள்ள பேராசிரியர் செல்வராஜிக்கும் தகவல் கொடுத்தார்.

கொள்ளை நடந்த பேராசிரியர் வீடு

தகவலறிந்து வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் பீரோவில் இருந்த 8சவரன் தங்க நகை, ரூ. 2ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளயடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


இதையும் படிங்க:திருமணத்தில் மகளுக்குத் தர வைத்திருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details