தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்தபட்ச வருமானம் திட்டத்தில் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்க முயற்சிகளை மேற்கொள்வோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்து வந்த ஆட்சியாளர்கள் பணிகளை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் விரிவுப்படுத்தவில்லை. குறிப்பாக தேனியில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர் ஆந்திராவில் உள்ள ரயில்வே ஒப்பந்ததாரரிடம் 15 விழுக்காடு கமிஷன் கேட்டுள்ளார். அதன் காரணமாகவே பணிகள் தாமதம் ஆகிறது என குற்றம்சாட்டினர்.
ரயில் பாதை தாமதத்திற்கு அமைச்சர்தான் காரணம் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - Madurai-Bhodi
தேனி: மதுரை- போடி அகல ரயில் பாதை திட்ட தாமதத்திற்கு காரணம் தேனியில் உள்ள அமைச்சர் 15 விழுக்காடு கமிஷன் கேட்கிறதுதான் காரணம் என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மேலும், தான் வெற்றி பெற்ற பிறகு ஆறுமாத காலத்திற்குள் போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகளை முடிப்பேன் என்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். தேனி அடுத்த பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் சூற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை என்றால் அந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவேன், என்றார்.