தேனி: தேனி பெரியகுளம் வன பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் சொந்தமான தோட்டத்தில் உள்ள வேலியல் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் ஆன நிலையில் இது தொடர்பாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பாக தங்கத்தமிழ் செல்வன் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென வனத்துறை ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார். ஆனால் அதனை மறுத்து மீண்டும் நேரில் ஆஜராக வேண்டுமென வனத்துறையினர் ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பினர்.
இதனை அடுத்து இன்று (நவ.12) தனது வழக்கறிஞர்களுடன் தேனி வனச்சரக அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் நேரில் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு இல்லை, என தான் நம்புவதாகவும் தோட்டத்தின் உரிமையாளராக சட்டப்படி நேரில் ஆஜராக வேண்டும் என்ற காரணத்தினால் நேரில் ஆஜராகி உள்ளேன்.
இந்நிலையில், விசாரணையின் போது தனக்குள்ள சந்தேகங்கள் பற்றி வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகவும் விசாரணைக்கு எப்போது தேவைப்பட்டாலும், முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்படுவார் இதையும் படிங்க:“நீர் தேங்கும் பகுதிகளில் புதிய மழை நீர் வடிகால்” - கே என் நேரு