தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைகள் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ சுண்டல் பயறும், மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ சுண்டல் பயறும் விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டியிலுள்ள (கடை எண்: 8) நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த சுண்டல் பயறுகள் சுருளிப்பட்டியிலிருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 300 கிலோ சுண்டல் கடத்த முயல்வதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் நியாவிலைக் கடைக்கு படையெடுத்து வந்ததைக் கண்ட நியாவிலைக் கடை ஊழியர், அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் 300 கிலோ சுண்டல் பயறை பொதுமக்கள் கைப்பற்றினர்.