தேனி: மதுரையைச்சேர்ந்த சரவணப்பெருமாள், ராமு ஆகியோர்களுக்குச் சொந்தமாக தேனியில் ஆர்ஆர் கல்குவாரி உள்ளது. இந்த குவாரி கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் இன்று திடீரென தேனி மாவட்ட வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் கல்குவாரியில் நுழைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையில் நடந்த சோதனையில் கல்குவாரி அலுவலகத்தில் உள்ள பதிவேடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வருகின்றனர். வருமான வரித்துறை திடீர் சோதனையை அடுத்து ஆண்டிபட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.