தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் அரிசியில் தவழ்ந்த எலி குஞ்சுகள் - பொதுமக்கள் அதிர்ச்சி! - Theni Ration rice Rat

தேனி ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் நியாய விலை கடையில் வழங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 11, 2022, 12:11 PM IST

தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக்கடையில் பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.

நேற்று ரேஷன் கடைக்கு வந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த மோகன் என்பவர் அரிசி வாங்கியுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசி ஐந்துக்கும் மேற்பட்ட எலிக் குஞ்சுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த அரிசியைக் கடைக்கு முன்பு கொட்டிய மோகன் மற்றும் ஊர்மக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் எலிக் குஞ்சுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரத்த வகை பொருந்தாமல் சிறுநீரக மாற்று சிகிச்சை.. சாத்தியமானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details