தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என உதித் சூர்யா தந்தை ஒப்புதல் - The impersonation is true

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என கைது செய்யப்பட்டுள்ள மாணவன் உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

உதித் சூர்யா

By

Published : Sep 26, 2019, 6:08 PM IST

Updated : Sep 26, 2019, 6:51 PM IST

நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர், கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மாணவர் உதித் சூர்யாவை, சிபிசிஐடி முன்பு ஆஜராக நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் மாணவர் ஆஜராகாத நிலையில் திருப்பதியில் பெற்றோருடன் இருந்த உதித் சூர்யாவை தனிப்படையினர் கைது செய்து சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட உதித் சூர்யா, அவரது தாய் கயல்விழி, தந்தை வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் சென்னை சிபிசிஐடி காவலர்கள் தேனி சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தியது. அதில் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில், ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என உதித் சூர்யாவின் தந்தை ஒப்புகொண்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப்பின் உதித் சூர்யாவின் தாய் கயல்விழி விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:காற்றில் கரைந்த கனவு: டாக்டர் அனிதாவுக்கு 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

Last Updated : Sep 26, 2019, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details