தேனி: முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்து 135 அடியை எட்டியதைத்தொடர்ந்து தமிழ்நாடு பொதுப் பணித்துறையினர், கேரள மாநிலத்தில் உபரி நீர் செல்லும் பெரியாற்றில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தனர். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து விளக்கம் கேட்டு விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தான் ’ரூல் கர்வ்’ முறைப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்தனர். ரூல் கர்வ் முறையைப்பின்பற்றினால் அணையில் பருவ மழைக்காலங்களில் போதிய அளவில் தண்ணீர் தேக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும் எனப்புகார் தெரிவித்து நீர்வளத்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்து அணையைப் பார்வையிட வலியுறுத்த வேண்டும் எனவும்;
மேலும் 142 அடி அணைக்கு நீர் மட்டம் வந்த பின்புதான் ’ரூல் கர்வ்’ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்; அதற்கு முன்பே ’ரூல் கர்வ்’ முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும்; அது தவறான செயல் எனவும் கூறி விவசாய சங்கத்தினர் பேசினர்.
மேலும், தமிழ்நாடு நீர் வள ஆதாரத்துறையினர் அனைவரும் கேரள மாநில அலுவலர்களுக்குப் பயந்து பணிகளை மேற்கொள்வதால் முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமை பறிபோய் கொண்டிருப்பதாகப் புகார் கூறி, விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமை பறிபோய் கொண்டிருப்பதாக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - mullai periyar dam
முல்லைப்பெரியாறு அணையில் பல்வேறு குளறுபடி சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறு குளறுபடி நடைபெறுவதாக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேலும் முல்லைப்பெரியாறு அணையில் பல்வேறு குளறுபடி சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறி, தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.40 அடியை தாண்டியது