தேனிஅருகே தாதகாப்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணிபுரிந்து வந்த செல்வபாண்டியன். இவர் சேலம் கொழிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரிடம் தான் செட்டில்மெண்ட் பட்டா மாறுதல் செய்வதற்காக பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செல்வபாண்டியனையும், அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் கண்ணன் என்பவரையும் கைது செய்து அவர்களை சிறையில் அடைந்தனர்.
இந்த நிலையில் செல்வபாண்டியனின் சொந்த ஊரான தேனி அருகில் உள்ள அல்லிநகரத்தில் அவருக்கு சொந்தமான பங்களாவில் இன்று காலை முதலே தேனி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.